News December 5, 2024
எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நீலகிரியின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்படும் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதகை ராவ்பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எச்.பி.ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.
Similar News
News October 26, 2025
நீலகிரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

நீலகிரியில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு<
News October 26, 2025
ஊட்டியில் வீடு புகுந்து..! அச்சத்தில் மக்கள்

உதகையைச் சேர்ந்தவர் சிக்கம்மாள். இவர் தனியா வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பெண் ஒருவர் வந்து வீட்டு வேலைகளை செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார். இதை நம்பிய சிக்கம்மாள், அவருக்கு காபி கொண்டு வருவதற்காக சமையலறைக்கு சென்றார். அப்போது, அப்பெண் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துச்சென்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 26, 2025
பந்தலூரில் இப்படியா?

நீலகிரி, பந்தலூர் பகுதியில் உள்ள முதுமலை பென்னை பழங்குடியின அரசு ஆரம்பப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்
அமர இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர் காலநிலையில் மாணவர்கள் தரையில் அமர்வது அவர்களுக்கு உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இப்பள்ளிக்கு இருக்கை வழங்க பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


