News August 14, 2024
ஊராட்சி கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக் குழுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக் குழுக்கூட்டம் (Annual General Body Meeting) வரும் 15.08.2024 அன்று நடைபெறவுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News October 22, 2025
கிருஷ்ணகிரி: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 22, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.22) 220.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 34 மி.மீ மழையும், போச்சம்பள்ளி 24.1 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பர்கூரில் 24 மி.மீ, நெடுங்கல் 16.2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.


