News November 22, 2024
ஊரமைப்பு அலுவலகம் புதிய இடமாற்றம்

நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பழைய நாகூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் நாகை, வெளிப்பாளையத்தில் இயங்கி வரும் அலுவலகம் 23ம் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் புதிதாக கட்டிடத்தில் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
நாகை: மாற்றுதிறனாளிகளுக்கான ஒவிய போட்டிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நவ.21 அன்று காலை 10 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஒவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
நாகை மாவட்டத்தில் தேவையான உரம் இருப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 76 தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் யூரியா 1731 டன், டிஏபி 355 டன், பொட்டாஸ் 279 டன், காம்ப்ளக்ஸ் 692 டன் மற்றும் போதுமான அளவு சூப்பர் பாஸ்பேட் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


