News March 19, 2024
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 15, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்15 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
News April 15, 2025
சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் அறிவிப்பு!

கோடைக்காலத்தை முன்னிட்டு, வரும் ஏப்.19- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொல்லத்திற்கும், ஏப்.20- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06585/06586) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
21 தலைமுறை பாவங்களை நீக்கும் கோயில்!

சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க