News January 3, 2025
ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News December 13, 2025
கிருஷ்ணகிரி: IT வேலை கனவா..? CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1800 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <
News December 13, 2025
ஓசூர்: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

தர்மபுரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகின்றது. அதற்காக இன்று(டிச.13) காலை 10 மணிக்கு குருப்பட்டி அருகே பயனில்லாத அரசு பள்ளி கட்டடம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தனர். அப்போது அப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பணியாளர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
News December 13, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர், சூளகிரி அருகே உள்ள பொன்னால் நத்தம் என்று ஊரில் தனியார் கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். நேற்று (டிச.12 ) இரவு தனது ஊரிலிருந்து வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது, எரண்டபள்ளி கிராமம் அருகே சாலையில் அதிவேகமாக வந்ததால் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மதில் சுவரில் இடித்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.


