News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News September 17, 2025
புதுச்சேரி: பாஸ்போர்ட் விசாரிப்பு போலீசார் இடமாற்றம்

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையில் பாஸ்போர்ட் விசாரிப்பு பிரிவில் பணிபுரியும் நான்கு போலீசார் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று இடமாற்றம். மேலும் போலிசார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களிடம் விசாரணையின் போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 16, 2025
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

புதுவைக்கு வருகை தந்துள்ள மத்திய தொழிலாளர் நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை, இன்று காலாப்பட்டு அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுவை சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
News September 16, 2025
புதுச்சேரி விமான நிலையத்தில் பயணியர் சேவை தினம்

புதுச்சேரி விமான நிலையத்தில், பயணியர் சேவை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் விமான நிலையத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், இரத்த தான முகாம், மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.