News December 4, 2024
ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம்

தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த திங்கள் முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்பொழுது நிலைமை சீராக உள்ளதால் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயங்க ஆரம்பித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. (உங்க பகுதியில் மழை இருந்தால் கமெண்ட் பண்ணுங்க)
News October 29, 2025
நீலகிரி: G Pay / PhonePe இருக்கா?

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


