News September 1, 2024
ஊட்டி மலை பூண்டு விலை கிலோ ரூ.470 விற்பனை

நீலகிரியில் உள்ள உபதலை, கேத்தி, இத்தலார், தும்மனட்டி, கூக்கல் உள்ளிட்ட இடங்களில் விளையும் பூண்டு மருத்துவ குணத்துக்கு பலர் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க ஏல மையத்தில் முதல் ரக பூண்டு கடந்த வாரத்தை போலவே, 1 கிலோ ரூ.470 க்கும், 2 ம் ரக பூண்டு ரூ.360க்கும் விற்பனை ஆனது.
Similar News
News May 8, 2025
நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. இந்த மிக முக்கிய எங்களை உங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News May 8, 2025
நீலகிரி: 20 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நீலகிரி 85 பள்ளிகள் உள்ளது. அதில் 5 அரசு பள்ளிகள் உட்பட 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 2,200 பேரில் 1,975 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
News May 7, 2025
குன்னூரில் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

குன்னூரில் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை பாதையில் பர்லியார் அருகே இன்று வேகமாக சென்ற கார் இன்னொரு காரின் மீது மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.