News April 26, 2025
ஊட்டி செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி செல்ல கூடுதல் வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 11, 2026
நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (நீலகிரி மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)
News January 11, 2026
உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி மலர்க்கொடி (45) என்பவர் உயிரிழந்தார். வேலைக்கு செல்லும்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியாகினார். தொடர்ந்து இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News January 11, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.


