News August 2, 2024
ஊட்டிக்கு வந்தடைந்த 32 பேரிடர் மீட்பு வீரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 32 பேர் நேற்று (01.08.24) மாலை உதகைக்கு வந்தடைந்துள்ளனர் .
Similar News
News October 31, 2025
நீலகிரி: சாய்பாபா பெயரில் பெண்ணிடம் மோசடி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுசி(37) என்பவரை ஏமாற்றிய வழக்கில் ராஜ்குமார்(46) என்பவர் கைது செய்யப்பட்டார். சுசியின் வீட்டை நிதி நிறுவன கிளை அலுவலகமாக போக்கியத்திற்கு எடுப்பதாக கூறி, ரூ.6.24 லட்சம் பெற்றும் பணம் திருப்பி தரவில்லை. புகாரின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் நிதி நிறுவனம் மட்டுமின்றி சாய்பாபா பெயரில் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.
News October 31, 2025
நீலகிரி: லஞ்சம் பெற்றால் புகார் – எண் வெளியீடு!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார் .நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
News October 31, 2025
நீலகிரி: மின்தடை அறிவிப்பு…ரெடியா இருங்க!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் (நவ.03) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கட்டபெட்டு, ஒர சோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, கலிங்கனட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


