News March 3, 2025
உழவர்களின் கனிவான கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: SIR படிவம் நிரப்பும் பணி தீவிரம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் அருகே உள்ள தொண்டப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான, அனுக்கூர் மற்றும் அ.குடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. பின்பு வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் பல வகைகளை உண்ண வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.
News November 28, 2025
பெரம்பலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!


