News December 31, 2024
உள்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.31) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
தேனி மக்களே அரிய வாய்ப்பு.!

தேனி மாவட்டதில் ஊா் காவல் படையில் சேர தகுதியுள்ள ஆண், பெண், திருநங்கைகள் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் பின்புறமுள்ள ஊா் காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து வருகிற 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு 45 நாள்கள் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை தகவல்.
News December 23, 2025
கம்பம் ஹோட்டல் கொலை விவகாரத்தில் இருவர் கைது

கம்பம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சத்தியமூர்த்தி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு தரப்புடன் ஏற்பட்ட தகராறில் சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் தப்பிச்சென்ற நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொலை செய்த முகிலன் (36), சிபிசூா்யா (24) ஆகிய இருவரையும் நேற்று (டிச.22) கைது செய்தனா்.
News December 23, 2025
தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <


