News August 25, 2024

உளுந்தூர்பேட்டையில் பிரபல சின்னத்திரை நடிகை 

image

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரஷாந்த் டான்ஸ் ஸ்டுடியோவின் நூறாவது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் சின்னத்திரை பிரபல நடிகை தீபா பங்கேற்று, நிகழ்ச்சியில் சிறப்பான நடனத்திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Similar News

News December 27, 2025

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

image

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வரும் (ஜன.10) சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை இந்திலி, DR.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 / 245246 தொடர்புகொள்ளவும்.வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!