News August 3, 2024
உலக தடகள சாம்பியன்ஷிப்: காஞ்சி மாணவர் தேர்வு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தென் அமெரிக்காவின் லிமா பெரு என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் கார்த்திகேயன் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேலாளர் சுஜாதா, காஞ்சி தடகள பயிற்சியாளர் தாஸ், காஞ்சி மாவட்ட தடகள சங்கத்தின் துணைத் தலைவர் விளையாட்டு வீரர் எஸ்.அரவிந்த் குமார் ஆகியோர் மாணவனை பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 14, 2025
காஞ்சி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 14, 2025
காஞ்சி: நகைக்காக மூதாட்டி கொலை?

சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராணி. கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் NH-ல் சுண்டல், வேர்க்கடலை விற்று வந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.13) ராணி நெடுஞ்சாலை அருகேயுள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நகைக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 14, 2025
காஞ்சிபுரத்தில் 30,644 பேருக்கு இலவச பட்டா!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் களக்காட்டூர் கிராமத்தில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில், 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி செலவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில், MP க.செல்வம், க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


