News March 6, 2025
உலக சாதனை படைத்த இரட்டையர்கள்

காரைக்குடி அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையர்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா். உலகச் சாதனை சான்றிதழ்கள், சிறப்பு பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் எஸ்.பி. குமரேசன், துணைத் தலைவர் கே. அருண்குமாா், முதல்வா் உஷாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2025
சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

சிவகங்கை அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி செந்தில்குமார் 45. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
சிவகங்கை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*