News August 26, 2024
உலக சாதனை சிலம்பம் போட்டி நிகழ்வு

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும், சிலம்பம் பயிற்சி நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று 26ஆம் தேதி காலை 8 முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எஸ்.பி ராஜேஸ்கண்ணன், எம்.பி, எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 22, 2026
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (பிப்ரவரி 22) நாமக்கல்-(சக்திவேல் – 9498168613), வேலூர் -(செங்குட்டுவேல் – 9498162758), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(ராஜா – 9384039452) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News February 22, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 22, 2026
நாமக்கல்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

நாமக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


