News August 14, 2024
உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருப்பூரில் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் லட்சுமி நகரில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் வருகிற 19ம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவனங்களில் டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
Similar News
News November 26, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அருள்புரம், தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், செட்டித்தோட்டம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், குன்னாங்கல்பாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், அவரப்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 26, 2025
வெள்ளகோவிலில் வெங்காய விலை கிடுகிடு உயர்வு

வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்னவெங்காயம் விற்பனை விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ ரூ.35-40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.50-52 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
News November 26, 2025
திருப்பூர்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


