News August 14, 2024
உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
Similar News
News November 26, 2025
கடலூர்: மயங்கி விழுந்துவர் உயிரிழப்பு

வடலூர் அடுத்த வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று மாலை மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸில் வந்து வடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
JUST IN கடலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.29-ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


