News April 16, 2025
உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த தாண்டவன் (49) என்பவருக்கும், அவரது உறவினர் சரவணன் (44) என்பவருக்கும் இடையே கடந்த 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் குடிபோதையில் இருந்த சரவணன், தாண்டவனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த தாண்டவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.
Similar News
News April 19, 2025
பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
News April 19, 2025
சேலம் ஆட்சியரகம் எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர்: 0427-2450301
▶️கூடுதல் ஆட்சியர், வளர்ச்சி முகமை, சேலம்: 7373704207
▶️மாவட்ட வருவாய் அலுவலர்: 9445000911
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது): 9445008148
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்): 9750080888
▶️தனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திட்டம் – ச.பா.தி) :9443797855
SHARE பண்ணுங்க மக்களே
News April 19, 2025
சேலத்தில் இன்றைய மின் தடை பகுதிகள்

சேலம்: வீரபாண்டி, புதுப்பாளையம், பாலம்பட்டி, கோணநாயக்கனூர், ராமாபுரம், சித்தர்கோவில், ஆரியகவுண்டம்பட்டி, ரெட்டிப்பட்டி, அரியானூர், உத்தமசோழபுரம், சித்தனேரி, ஆத்துக்காடு, கிச்சிப்பாளையம், எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, ராசிநகர், காஞ்சிநகர், எஸ்.கே.நகர், எம்.கே.நகர், காந்திபுரம் காலனி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(ஏப்.19) மின்சார ரத்து. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.