News February 18, 2025
உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News November 6, 2025
நெல்லை காவல் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் கார்த்தி மணி உத்தரவுபடி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை இரவு காவல் பணியில் செயல்படும் அதிகாரிகள் காவல் நிலைய பகுதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News November 5, 2025
நெல்லை: அன்புமணி மீது போலீசார் வழக்கு பதிவு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நெல்லைக்கு வருகை தந்தார் அவர் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை சென்று அங்கே ஆற்றைக் காப்பாற்ற கோரி கோஷமிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முறையாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 5, 2025
கை துண்டிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த இசக்கி என்ற 21 வயது இளைஞர் இடது கை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ அலுவலர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கையை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் என டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை அவர் பாராட்டினார்.


