News August 17, 2024
உரிமை தொகை வதந்தி: அதிகாரிகள் மறுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் 19 , 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் இதில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என துறை அதிகாரிகள் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்*
Similar News
News December 5, 2025
கம்பால் அடித்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News December 5, 2025
கொலை வழக்கில் சமூக சேவை செய்ய உத்தரவு

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.


