News April 25, 2024
உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.44 கோடி
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக மொத்தம் 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 317 வழக்குகள் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 62 வழக்குகளில் ரூ.1,44,82,819 பணம் உரிமை கோரப்படாமல் கருவூலத்தில் உள்ளது.
Similar News
News November 20, 2024
கோவை: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்
கோவை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
News November 20, 2024
கோவை: இன்றைய தலைப்பு செய்திகள்
➤ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் ➤கோவையில் 65 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் ➤பசுமை கோவை செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் ➤துக்க வீட்டில் தீ விபத்து: பலி 3 ஆக உயர்வு ➤ஹாக்கி மைதானம் அமைக்க அமைச்சர் ஆய்வு ➤கோவை வந்தடைந்த செந்தில் பாலாஜி ➤நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி ➤கோவை சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ➤கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு.
News November 20, 2024
ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் கீழ் தமிழகத்தின் பாதுகாப்பு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.