News April 15, 2024
உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: கபீர் பிரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கலவரம் மற்றும் வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களை காப்பாற்றும் நபர்களின் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி 3 பேருக்கு காசோலையும் குடியரசு தினத்தன்று கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படும். இந்த விருது பெற தகுதியுடையவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 13, 2025
கள்ளக்குறிச்சியில் ரேஷன் குறைதீர் முகாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல்/நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். மேலும், பொதுமக்கள், இதில் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.


