News January 23, 2025

உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

image

தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News October 24, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

நேர்மையை பாராட்டிய காவல்துறை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் சாலையில் அதே பகுதியை சார்ந்த குமார் செல்லும்போது சாலையில் கண்டெடுக்கப்பட்ட செல்போன் மற்றும் நகையில் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் அதை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை பாராட்டிய காவல் ஆய்வாளர் மீனா மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் காவலர்கள் சந்தியா ஆகியோர் விசாரணை செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News October 23, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!