News April 2, 2025
உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25இல் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் வரும் 6ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறகிறது. அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News August 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
News August 9, 2025
கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.