News December 31, 2024

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.

Similar News

News November 14, 2025

அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்பு!

image

கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமம் குருமந்தூர் மேடு அலங்கியம் ரேசன்கடை அருகிலுள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் பிரேதம் மிதந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நம்பியூர் காவல்துறையினர் மற்றும் நம்பியூர் தீயணைப்புத் துறையினர் மேற்படி பிரேதத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 14, 2025

ஈரோட்டில் நடந்த கொடூர நிகழ்வு!

image

டி.என்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மகன் 10 வகுப்பு படித்து வருகிறார். பரமேஸ்வரன் தான் குளிக்க தண்ணீர் எடுத்து வைக்க மகனிடம் கூறியுள்ளார். மகன் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் சாப்பாட்டிற்கு வைக்கப்பட்ட சுடு தண்ணீரை மகன் மீது ஊற்றியதால் மகன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

News November 14, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100-ஐ மற்றும் சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது

error: Content is protected !!