News March 27, 2025

உத்தமசோழபுரம்: கம்பம் நடுதலுடன் தொடங்கிய திருவிழா 

image

 உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள புது மாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2025

சேலம் வழியாக ப்ரௌனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

வரும் ஏப்.26, மே 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.29, மே 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News April 20, 2025

சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 382 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

சேலம்-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

image

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!