News March 12, 2025
உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2025
கனமழையால் இடிந்து விழுந்த கூரை வீடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் குறுவட்டம் மோகூர் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி (வயது சுமார் 70) என்பவரின் வீட்டின் கூரை ஒரு பகுதி சுவர் நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது, இதில் காயமடைந்த பெரியசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 13, 2025
தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று காலை கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் பொழுது தனியார் பஸ் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்,சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
News March 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.