News September 13, 2024
உதயநிதி ஸ்டாலினுடன் புதுக்கோட்டை அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நடைபெற்று முடிந்த சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் நைட் ரேஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு அயராது உழைத்த அனைவரையும் கௌரவிக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Similar News
News November 15, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 14, 2025
புதுகை: மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் இன்று (நவ.14) நடைபெற்றது. உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News November 14, 2025
புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!


