News March 28, 2024
உதயநிதி பிரச்சார தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31-ந் தேதி மாலை புதுச்சேரியில் வில்லியனூர் கிழக்கு மாட வீதி, மரப்பாலம், அண்ணா சிலை சதுக்கம் ஆகிய மூன்று இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News December 5, 2025
புதுவை: மது குடித்த ஆசிரியர் உயிரிழப்பு

புதுவை கந்தப்ப முதலியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் சார்லஸ் எடிசன்(57). இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சார்லஸ் எடிசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த அவர் கருவடிக்குப்பம் அருகே உள்ள மதுபானக்கடையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
கடலோர காவல்படை கமாண்டர் புதுச்சேரி வருகை

புதுச்சேரி வந்திருந்த இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் தந்த்விந்தர் சிங் சைனி நேற்று உப்பளம் துறைமுகத்தில் உள்ள கடலோர காவல் படை உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலர் சரத் சவசாள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டிருதி. தசிலா, இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் கமாண்டர் சந்தோஸாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News December 5, 2025
புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.


