News August 7, 2024

உதயநிதி ஈரோடு திமுக நிர்வாகிகளை புறக்கணித்தாரா?

image

ஈரோடு திமுக நிர்வாகிகளை சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடுக்கு அண்மையில் வந்த உதயநிதியை வரவேற்க திமுகவினர் கடந்த 1ஆம் தேதி இரவு கருமாண்டம்பாளையம் பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை சந்திக்காமல் உதயநிதி சென்று விட்டதாகவும், இதேபோல் 2ஆம் தேதி கெஸ்ட் அவுசிற்கு வந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Similar News

News November 22, 2025

ஈரோட்டில் இரு மடங்கு விலை உயர்வு

image

சத்தி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் நேற்று கி.ரூ 1740 க்கு விற்றது. இன்று இரு மடங்கு விலை உயர்ந்து கி.ரூ 3300/- விற்பனையானது. இதே போல் மற்ற பூக்களும் விலை உயர்ந்தது . அதன் விவரம் முல்லைப்பூ – ரூ 840– 1360, காக்கடா – ரூ 925 – 1450 க்கும், ஜாதி முல்லை – ரூ 650 – 750க்கும், கனகாம்பரம் – ரூ. 900 க்கும், சம்பங்கி – ரூ – 180 க்கும் விற்பனையானது.

News November 22, 2025

ஈரோடு: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News November 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

கார் ஓட்டும்போது மொபைலில் மெசேஜ் அனுப்புவது கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு காரணமாகும், என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது; அவசரமாக இருந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பின்னர் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் ஃபோனை அணுக முடியாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!