News April 8, 2025
உதகையில் மத்திய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

உதகையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உதகை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.மமுருகனுக்கு சேரிங்கிராஸ் பகுதியில் பாண்டு வாத்திய இசை முழங்க நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ . தருமன் அமைச்சர் ஏ .முருகன் அவர்களுக்கு ஜவ்வாது மாலை அணிவித்து வரவேற்றார் . முன்னாள் மாவட்ட தலைவர் , தற்போதைய மாவட்ட தலைவர் மோகன் ராஜ் , தமிழ்நாடு பாஜக நிர்வாக குழு உறுப்பினர் சபிதா போஜன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்கள்.
Similar News
News September 19, 2025
நீலகிரி: ஆட்கொல்லி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தயார்

கூடலூர் ஓவேலி வனப்பகுதியில், மனித-யானை மோதலை ஏற்படுத்தி வரும் யானையைப் பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், நான்கு கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் யானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் யானைக்கு பொருத்துவதற்காக ரேடியோ காலரும் தயார் நிலையில் உள்ளது.
News September 19, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு உட்கோட்டங்களிலும் இன்று (18.09.2025) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 18, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூடலூர் வட்டம் நெல்லியாலம் பகுதிக்கு நாளை (செப்.19) பாரிஸ் ஹாலில் முகாம் நடைபெறுகிறது. சேரங்கோடு ஊராட்சிக்கு அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், ஊட்டி வட்டம் தூனேரி கிராம ஊராட்சிக்கு அணிக்குகோரை சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த முகாம்களில் அளிக்கலாம்.