News August 9, 2024
உதகையில் சர்வதேச பழங்குடி தின கொண்டாட்டம்

கூடலூர், தேவர்சோலை , மச்சி கொல்லி பகுதியில் பேபி நகர் பழங்குடி கிராமத்தில் சர்வதேச பழங்குடி தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . தமிழ்நாடு பழங்குடி சங்க புதிய கிளை துவக்கப்பட்டது . பழங்குடி பெண் கர்க்கி வில் , அம்பு கொடி ஏற்றினார் . அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்வில் நீலகிரி மாவட்ட AITUC செயலாளர் முகமது கனி , வழக்கறிஞர் செவ்விளம்பரிதி , மகேந்திரன் மற்றும் பழங்குடியினர் பங்கேற்றனர் .
Similar News
News December 6, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 6, 2025
குன்னூரில் 3500 பேருக்கு ஓட்டு இல்லையா? அதிர்ச்சி தகவல்

குன்னூர் நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், குன்னூர் நகராட்சியில் மட்டும் 618 இறந்தவர்கள் மற்றும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. மேலும் மொத்தம் 2800 மேற்ப்பட்ட பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணி முடிவில் 3500க்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியல் நீக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
News December 6, 2025
நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


