News August 14, 2024
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Similar News
News November 3, 2025
போதை உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்:போலீசார் அறிவுறை!

போதைப் பொருட்களின் ஆபத்து குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்..! Say No To Drug” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை ஈரோடு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
News November 3, 2025
ஈரோடு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள்: நவ.10.ஆகும்:உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 3, 2025
ஈரோட்டில் 97.8 டிகிரி பாரன்ஹீட் பதிவு!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று வறண்ட வானிலை காணப்படுகிறது. குறிப்பாக பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. ஈரோடு மாநகரில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. ஈரோட்டில் நேற்று, 36.6 டிகிரி செல்சியஸ் வெயில் (97.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவானது.


