News December 5, 2024
உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இன்று (05.12.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகவே உணவின் தரத்தின் குறித்து உண்மை தன்மைகளை கேட்டறிந்தார்.
Similar News
News July 11, 2025
கரூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 26ஆம் தேதி அரசு கலை கல்லூரி, தாந்தோன்றிமலையில் நடைபெறுகிறது. இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு அனைத்து கல்வித்தகுதிகளிலும் பணியாட்களை தேர்வுசெய்யவுள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News July 11, 2025
கரூர்: தனியார் டிவி நிருபர் மீது தாக்குதல்

கரூர்: குளித்தலை, பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சிவா(34). இவர், சன் ‘டிவி’யில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். போதையில் இருந்து நான்கு பேரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவாவிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிவா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News July 10, 2025
புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா? ஈஸியாக வாங்கலாம்

கரூர் மாவட்டத்தில் வரும் 12 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. ▶️கரூர் ▶️அரவக்குறிச்சி ▶️மண்மங்கலம் ▶️புகழூர் ▶️குளித்தலை, ▶️கிருஷ்ணராயபுரம் ▶️கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல் மேலும் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!