News December 5, 2024
உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இன்று (05.12.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகவே உணவின் தரத்தின் குறித்து உண்மை தன்மைகளை கேட்டறிந்தார்.
Similar News
News November 17, 2025
கரூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.<
News November 17, 2025
கரூர் அருகே வசமாக சிக்கிய பெண்!

கரூர் பசுபதிபாளையம் கொடியரசு கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானசாமி மனைவி வளர்மதி (62). இவர் அப்பகுதியில் உள்ள வடக்கு தெருவில் முள்ளு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் மது விற்ற வளர்மதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்
News November 17, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அடுத்த பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் விஜயகுமார் (65). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற விஜயகுமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


