News February 17, 2025
உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 20, 2025
புதுவை: மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மஞ்சினி (82). இவர் சம்பவத்தன்று வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை ஆப் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு, மஞ்சினி மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவரை, குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை மஞ்சினி உயிரிழந்துள்ளார்.
News November 20, 2025
புதுச்சேரி: மோடியை சாடிய எம்பி வைத்திலிங்கம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், மோடியால் தான் பாகிஸ்தான் பிரச்சினையே வந்தது என்றும், டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு குறித்து முன்பே எப்படி தெரியாமல் போனது என்றும் வைத்திலிங்கம் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.