News August 14, 2024
உடையார்பாளையம் : கம்பி வேலியை திருடிய மூவர் கைது

உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சுங்கச்சாவடிக்கு சொந்தமான 50 கிலோ எடை கொண்ட கம்பி வேலியை அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் திருடி சென்றனர். அப்போது, உடையார்பாளையம் காவல் துணை ஆய்வாளர் ரமேஷ் பாபு ரோந்து சென்றார். அதை கண்ட மூவரும் இரும்பு கம்பியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
அரியலூர்: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அக்டோபர் மாத அரிசியுடன் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை மட்டும் முன்கூட்டியே அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதத்திற்கான கோதுமை, து.பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்கள் வழக்கம்போல் நவம்பர் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
அரியலூர்: அழகு கலை பயிற்சி பெற அழைப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு திறன் அடிப்படையில் ஓப்பனை, அழகுக்கலை மற்றும் TATTOO குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…
News October 18, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!