News September 13, 2024
உடையார்பாளையத்தில் கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
தமிழ்நாட்டிலேயே அரியலூர் தான் முதலிடம்

அரியலூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் வகையில் கடந்த செப்டம்பர் தொடங்கி அனைத்து கிராமங்கள் தோறும் நீர்நிலைகள் அரசு புறம்போக்கு இடங்களில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 18,50,000 பனை விதைகள் நடவு செய்து தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
அரியலூர்: மோட்டார் சைக்கிள் திருடிய நபர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசார் கல்லாத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த போது, அவ்வழியாக வந்த கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த வீரகண்டமணியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவர் மீது குற்ற சம்பவங்கள் இருக்கிறதா என்று ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
அரியலூர்: வெளிநாடுகளில் பயில இலவச பயிற்சி

அரியலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பல்வேறு வெளிநாட்டு முன்னணி பல்கலைகழகங்களில் பட்டபடிப்பு பயில சர்வதேச ஆங்கில மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ மூலம் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04329-228315 என்னை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


