News March 27, 2025
உடுமலை கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார். பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே உள்ள பிரதான கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வசந்தகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 18, 2025
திருப்பூர்: தலைமறைவு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் நகர் பகுதியில் கார் திருடப்பட்ட வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ராமன் என்ற சப்பாத்தி ராமன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
News September 17, 2025
மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம்,உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்
News September 17, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.