News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 12, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு இருக்கா.? முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த குறைதீர் முகாம் நாளை (13.12.2025) நடக்கிறது. வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர், முகவரி திருத்தம் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
தூத்துக்குடி: பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை

தூத்துக்குடி தென்பாகம் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து 5 பார்சல்களில் 112 கிலோ புகையிலை பொருள்கள் வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த பார்சல்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 12, 2025
அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.


