News March 17, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

கோவையில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
Similar News
News March 17, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின், கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
கனடா அமைச்சரவையில் கோவை பூர்வீகமாக கொண்ட பெண்

கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கோவைக்கு பெருமை சேர்த்த அனிதா-க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
News March 17, 2025
கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு!

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் பல பகுதிகளில், கடந்த 2 தினங்களாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சில இடங்களில், இன்றிரவு 7 மணி வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.