News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News January 2, 2026

கிருஷ்ணகிரி: ரூ.50 ஆயிரம் கடனால் பறிபோன உயிர்!

image

கொட்டாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). கடந்த 25ம் தேதி மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் இருவரும் வேலுமணியிடம் கொடுத்த ரூ.50 ஆயிரம் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் வேலுமணியை தடியால் தாக்கி கழுத்தில் துண்டை போட்டு தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால் மனவேதனையடைந்து விஷம் குடித்த வேலுமணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

News January 2, 2026

கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

கிருஷ்ணகிரியில் இலவச வாகன பயிற்சி! CLICK HERE

image

கிருஷ்ணைரி மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, AUTOMOTIVE என்ற தளத்தை <>கிளிக் செய்து<<>>, உங்கள் விவரங்களை பதிவு செய்யவும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!