News October 26, 2024
உங்கள் தகவல்கள் திருடப்படலாம் எச்சரிக்கை!
திண்டுக்கல் மாவட்ட போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தியுள்ளனர். இணைய தளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல் திருடப்படலாம். இது தொடர்பான புகார்களுக்கு
சைபர் கிரைம் ஹெல்ப் லைன்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம்
Similar News
News November 20, 2024
40 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை துவக்கம்
ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மலைக்கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய ரோப்கார் மூலமாக பக்தர்கள் செல்வார்கள். 40 நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் ரோப்கார் சேவை துவக்கப்பட்டது.
News November 20, 2024
எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் 1 இடம்
வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத்தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில் திண்டுக்கல் 1 இடம் பிடித்துள்ளது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட கணக்கீட்டுப் பணியில் 14.33 லட்சம் உள்பிரிவுகளில் 100 சதவீதம் நிறைவு செய்தது. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்பை மதிப்பீடு செய்து, அதன்படி வேண்டிய கட்டமைப்பு பணிகளுக்கு இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
News November 20, 2024
பழனியில் ரோப்கார் சேவை தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவுற்று நாளை முதல் இயக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு மேல் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.