News August 26, 2024
ஈரோட்டை சேர்ந்த அமைப்பிற்கு விருது வழங்கிய எம்பி

ஈரோடு ஜேசிஐ கிரீன் சிட்டி என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வேளாண்மை துறைக்கான விருதை இன்று பெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விருதினை பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
Similar News
News December 28, 2025
ஈரோடு கலெக்டர் ஆய்வு

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றன. இரண்டாம் நாளான இன்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளை அலுவலில் இருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
News December 28, 2025
ஈரோடு: திருமணம் ஆக போகும் பெண்களுக்கு! CLICK

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. இதை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அனுகவும். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
ஈரோடு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டத்தை தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!


