News August 27, 2024
ஈரோட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி!

தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 77வது தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான, தமிழக அணி தேர்வு போட்டி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் மையத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி மாணவி கனிகா கலந்து கொண்டு தமிழக அணியில் தேர்வானார். இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
Similar News
News October 25, 2025
JUST IN: ஈரோடு மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரம் பெய்த மழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஈரோடு காவிரி கரையோரம் உள்ள மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
News October 25, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 24, 2025
ஈரோடு: IRCTC-ல் வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


