News August 16, 2024

ஈரோட்டில் 4 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

image

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிவந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுக,ம் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, கோபி காவல் துணை கண்காணிப்பாளர், ஈரோடு டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 18, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 18, 2025

ஈரோடு: நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

image

ஈரோடு: சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரி வலசையைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. இவர் தோட்டத்தில் 57 செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(செப்.17) இரவு இந்த ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். தெரு நாய்கள் 3 மேற்பட்ட நாய்கள் பட்டியல் புகுந்து 29 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 7ஆடுகள் இறந்துவிட்டன. 22 ஆடுகள் காயம் அடைந்துள்ளன.

News September 18, 2025

ஈரோடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

image

ஈரோடு மக்களே…, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA,M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!