News August 3, 2024
ஈரோட்டில் 31 பேருக்கு பணி நியமன ஆணை

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News December 14, 2025
ஈரோட்டில் 351 போ் அதிரடி கைது

ஈரோடு மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் சாா்பில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்களை சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனா்.இதனை தடுக்கும் வகையில் இந்தாண்டு 135டன் அரிசியை கடத்திய 351 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 14, 2025
பவானி அருகே சோகம்: ஒருவர் பலி

பவானி ஜிஎஸ்காலனி புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தப்பன் 54. இவர் சித்த வைத்தியம் பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஆண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுந்தப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


