News April 6, 2025
ஈரோட்டில் 3 மாதத்தில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 19,600 பேருக்கு சளி பரிசோதனை செய்து, 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சை மூலம் இதுவரை, 877 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்தாண்டுகளைவிட இந்தாண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது இவ்வாறு கூறினர்.
Similar News
News July 9, 2025
2-ம் வகுப்பு ஈரோடு மாணவி சாதனை

ஓசூரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில் 250 மீட்டர் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி டி.மகிழ்மதி 4 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார். பதக்கங்களை குவித்த மாணவியை அவர் படிக்கும் பள்ளியின் தலைவர் சி.என்.ராஜா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். ஈரோடு மாணவிக்கு உங்களது வாழ்த்துகளை கமெண்ட் பண்ணுங்க மக்களே
News July 9, 2025
ஈரோட்டில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை அரசியல் கட்சிகள், ஜாதி, மத,பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு என்ன தகுதிகள்!

▶️கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஈரோட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் ▶️தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் ▶️21முதல் 32 வயது வரை இருக்கலாம் ▶️மிதிவண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் ▶️ஆகஸ்ட் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்▶️இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக(VAO) பதவி உயர்வு வழங்கப்படும்.ஷேர் பண்ணுங்க!