News January 23, 2025
ஈரோட்டில் ₹ 1.50 கோடி பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 2, 2026
நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அதிரடி கைது

நம்பியூர் இரண்டாவது வடக்கு வீதி காந்திபுரம் மேடு பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மகன் மரவேலை செய்யும் கூலி தொழிலாளி மருதாச்சலம் (40). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை நேற்று கோபி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
News January 2, 2026
ஈரோடு அருகே வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தொல்லி பகுதிக்கு பர்கூரிலிருந்து சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது தொல்லி அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 2, 2026
ஈரோடு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் : 1930, குழந்தைகள் : 1098


